பிட்புல் ரக நாய் கடித்து ஒருவர் பலி - குடும்பத்தினர் கோரிக்கை
சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் கருணாகரன் என்பவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திங்களன்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த போது, பூங்கொடி என்பவரின் வளர்ப்பு நாய், கருணாகரனுக்கு ஏற்கனவே காயம்பட்ட வலது கால் தொடையில் கடித்து குதறியுள்ளது. அப்போது, பூங்கொடி தனது நாயை பிடித்தபோது, அவரையும் கடித்துள்ளது. வலியில் துடித்த கருணாகரனை அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸில் கே கே நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நாயை அதிகாரிகள் பிடித்து சென்ற நிலையில், இந்த சம்பவத்திற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாகரனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.