பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு - அதிமுக சிவி சண்முகத்திற்கு சம்மன் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து பேசியது தொடர்பாக அதிமுக எம்பி சிவி சண்முகம், வரும் 17-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது . விழுப்புரத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் சிவி சண்முகம் இலவச திட்டங்களோடு இணைத்து பெண்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார். இந்த கருத்து சர்ச்சையான நிலையில், சிவி சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.