சென்னையில், MRP விலையை விட அதிக விலைக்கு ஐஸ்கிரீம் கேக்கை விற்ற zomato மற்றும் ஹேவ் மோர் நிறுவனங்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 செப்டம்பர் 20ஆம் தேதி விருகம்பாக்கத்தை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் zomato மூலம் ஹேவ் மோர் என்ற கடையில் இருந்து இத்தாலிய கசாட்டா ஐஸ்கிரீம் கேக்கை ஆர்டர் செய்தார். அப்போது எம்.ஆர்.பி. 300 ரூபாய் என இருந்த நிலையில், ஆயிரத்து 182 ரூபாய் வசுலிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், இது நியாயமற்ற வணிகம், சேவை குறைபாடு என்ற நுகர்வோர் குறைதீர் ஆணையம், இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு 7 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது.