Cuddalore News | நண்பனின் தந்தையை கடத்திய 4 பேர் கைது

Update: 2025-10-07 06:14 GMT

கடலூரில், நண்பர்கள் கடத்திய தன்னுடைய தந்தையை, தங்கக் கட்டிக் கொடுத்து மகன் மீட்ட, சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த பூவராகவனை கடத்திய மர்ம கும்பல், அவரது மகன் அரிஷ் கேசவை தொடர்பு கொண்டு 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியது. நண்பர் அஜித் அறிவுரையில், வங்கி லாக்கரில் இருந்த 310 கிராம் தங்க கட்டியை கொடுத்து, தந்தையை அரிஷ் கேசவ் மீட்டுள்ளார். விசாரணையில் நண்பர் அஜித் தான், சம்பவத்திற்கு மூளையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அஜித், சதீஷ்குமார், வினோத்ராஜ், ரேணுகா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்