Cuddalore | Fish | Python | மீன் பிடிக்க சென்ற மீனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கடலூர் அருகே மீன்பிடி வலையில் மலைப்பாம்பு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழ்ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஓடையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வலையில் மலைப்பாம்பு சிக்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.