Cuddalore | சடன் பிரேக்கால் வந்த சண்டை - அரசு பேருந்து ஓட்டுநருடன் அடிதடியில் இறங்கிய இளைஞர்கள்
கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஓட்டுனருக்கும் காரில் வந்தவர்களுக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தில் அரசு குளிர்சாதன பேருந்து சென்றபோது, பயணி ஒருவர் இறங்கவேண்டும் என கூறியதால், உடனே ஓட்டுநர் பேருந்தை ஓரங்கட்டியுள்ளார். இதனால், பின்னால் காரில் வந்தவர், காரை உடனே நிறுத்தியதால், காரில் பயணித்தவர்களுக்கு லேசான அடி ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்து ஓட்டுநருக்கும், காரில் வாந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இதில் காயமடைந்தவர்களை அருகில் இருந்த ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்து, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.