Crocodile | ஒரு நொடியில் உயிரே போயிருக்கும் - காலை கடித்து இழுத்து மரண பயத்தை காட்டிய முதலை
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, முதலை கடித்ததால் கூச்சலிட்டவாறு முதலையின் பிடியிலிருந்து தப்பிய மீனவர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார்.
மீன் பிடித்துக் கொண்டிருந்த சிவபிரகாசம் என்பவரின் காலை, திடீரென முதலை கடித்து இழுத்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் அலறிய நிலையில், முதலையின் பிடியிலிருந்து காலை உருவிக்கொண்டு கரையை வந்தடைந்தார். மேலும் இது போன்ற சம்பவம் தொடர்ச்சியாக நடைபெறுவதால் முதலைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.