ரேணுகாசாமி கொலை வழக்கில் அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் தர்ஷன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். “சுமார் ஒரு மாதமாக சூரிய ஒளியை பார்க்கவில்லை, இதனால் கை கால்களில் புண் ஏற்பட்டுள்ளது. இந்த சித்ரவதையை காட்டிலும் தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்கள்” என நீதிபதிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்து, தர்ஷனுக்கு கூடுதல் தலையனை, சிறப்பு படுக்கை, சிறைவளாகத்திற்குள் நடமாடும் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.