மேயர் பிரியாவை கேள்விகளால் திணறடித்த கவுன்சிலர்கள்

Update: 2025-07-31 04:55 GMT

சென்னை மாநகராட்சி கட்டிடத்திற்கு உள்ளேயே நாய்கள் அதிகம் இருப்பதாக மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறிய குற்றச்சாட்டிற்கு மேயர் பிரியா பதிலளிக்க முடியாமல் திணறினார். நாய்களுக்கு சிப் பொருத்தி, தடுப்பூசி, இனக்கட்டுப்பாடு விவரங்கள் அதில் தெரியப்படுத்தப்படும் என்று மேயர் பிரியா கூறினார். தெரு நாய்களை பிடித்து இனக்கட்டுபாடு செய்வதால் மட்டும் அவை கடிக்காது என்று உத்தரவாதம் தர முடியுமா என்று கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். அதற்கு மேயர் பிரியா, நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒற்றை வார்த்தை கூறி விட்டு, அடுத்த உறுப்பினர்களை பேச அனுமதித்ததால், தெருநாய் பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பிய கவுன்சிலர்களுக்கு கடைசி வரை முறையான பதில் இல்லை என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்