Corona Virus | மீண்டும் மிரட்டும் கொரோனா - சிவகங்கையில் 2 பேருக்கு தொற்று உறுதி

Update: 2025-06-09 04:46 GMT

சிவகங்கையில் நகராட்சி கமிஷனருக்கும், கர்ப்பிணி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையில் நகராட்சி கமிஷனராக பணியாற்றும் கிருஷ்ணா ராமிற்கு இரண்டு நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, அவர் சொந்த ஊரில் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல், சிவகங்கையை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகிறார். அவர்கள் வசிக்கும் பகுதியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்