தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், தென் மாவட்டங்களில் முக்கிய மருத்துவமனையாக விளங்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 30 படுக்கைகள், சிறியவர்களுக்கு 20 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.