வேகமாக பரவும் கொரோனா.. முன்னாள் தலைமை விஞ்ஞானி சொன்ன முக்கிய தகவல்

Update: 2025-06-01 06:35 GMT

காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் வெளியே செல்லும்போது மாஸ்க் அணிவது நல்லது என,

உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், தி.மு.க எம்.எல்.ஏ. எழிலன் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா சுவாமிநாதன், தடுப்பூசி போட்டுள்ளதால் கோவிட் வைரஸ் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், மாஸ்க் அணிவது, கைகளை சோப் போட்டு கழுவுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்