ரஜினியின் 'கூலி' உள்ளிட்ட பல கெட்டப்களில் முதல்வர் ரங்கசாமிக்கு பேனர்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் வரும் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ரஜினியின் 'கூலி' முதல் சூர்யாவின் ‘ரெட்ரோ' படம் உள்ளிட்ட பல்வேறு கெட்டப்களில் அவருக்கு, ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர்.
குறிப்பாக, அவர் கர்மவீரர் காமராஜர் உடன் இருப்பது, டென்னீஸ் வீரராக இருப்பது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரியில் பேனர் தடைச்சட்டம் அமலில் உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முதல்வருக்கு பேனர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.