நடிகர் விகரம் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டில் தகராறு... ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பதில் போட்டி...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு மருத்துவமனை வளாகம்...
ரத்தக் கோலமாக கிடந்த இளைஞர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்
படுகாயமடைந்து சுயநினைவின்றி கிடந்த நபரை மட்டும் மேல் சிகிச்சைகாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்
உவினர்களும் , நண்பர்களும் கதறிக் கொண்டிருக்க அந்த இடமே பரபரப்பாக மாறி இருந்த
காயம்பட்டிருந்தவர்கள் மூவரும் மாடுபிடி வீரர்கள்..
ஜல்லிக்கட்டு மாடுகளின் கொம்பில் சிக்காமல் தப்பித்தவர்கள்,
ஒரு சிறுவனின் கையில் இருந்த கத்தியால் குத்துப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளனர்.
இந்த வீரதீர சூரர்களுக்கு என்ன நடந்தது ? என்பதை தெரிந்து கொள்ள அன்று இரவே சம்பவ இடத்திற்கு விரைந்தார் நமது investigator சேகர்.
மொத்த ஊரையும் சூழ்ந்திருந்த அச்ச இருளை, சைரன் விளக்குகள் விலக்கி கொண்டிருந்தது.
ஆங்காங்கே கிடந்த சட்டைகளும், காலணிகளும்
நடந்த கொடூரத்தின் சாட்சிகளாக மாறி இருந்தது.
சம்பவ இடத்தில் திண்டுக்கல் SP பிரதீப், Rural DSP சிபிசாய் சௌந்தர்யன் நேரில் ஆய்வு செய்து கொண்டிருக்க, சிறிதும் தாமதிக்காமல் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் விசாரணையை தொடங்கி இருக்கிறார்.
இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர், இந்த ஃபிரண்ட்ஸ் கேங்கில் முன்னாள் உறுப்பினராக இருந்த பொன்னையா என்பவர் தான்.
நத்தம் பகுதியை சுற்றியுள்ள வெவ்வேறு கிராமத்தை சேர்ந்த இவர்களை ஒன்றாக இணைப்பது ஜல்லிகட்டு.
சுத்துப்பட்டு கிராமத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் இவர்கள் வாடிவாசலில் முதல் ஆளாக வந்து நிற்கும் வீர தீர சூரர்கள்.
4 பேருமே ஒரே அணியாக களத்தில் இறங்கி திமிறி எழும் காளைகளை அடக்கி குக்கர், கிரைண்டர் என கிடைக்கிற பரிசுகளை சரிக்கு சமமாக பிரித்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வு ஓப்பந்தமும் இருக்கிறது. அது, ஒரே ஆள் அனைத்து மாடுகளையும் பிடிக்க கூடாது என்கிற கண்டிஷன்.
அதாவது நான்கு பேரில் ஒருவர் ஒரு மாட்டை அடக்கினால், அதன்பிறகு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்
இப்படித்தான் அனைத்து போட்டிகளிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.