பைக் மீது மோதிய கண்டெய்னர் லாரி - தலை நசுங்கி பலியான கொடூரம்.. காஞ்சியில் துயர சம்பவம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தென்மாத்தூர் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி சக்திவேல் மற்றும் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சேந்தமங்கலம் அருகே அவர் சென்ற போது, சாலையில் பின்னால் வந்த மினி கண்டெய்னர் லாரி, அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த பெண் அவசர சிகிச்சை மையத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.