வசந்த் அன்கோவின் 130-வது கிளையை குத்து விளக்கேற்றி திறந்து வைத்த காங்., எம்.பி விஜய் வசந்த்
தமிழகத்தின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான வசந்த் அன்கோவின் 130-ஆவது கிளை, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திறக்கப்பட்டுள்ளது. வசந்த் அன்கோ நிறுவனத்தின் உரிமையாளரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், குத்து விளக்கேற்றி, 130வது கிளையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார், விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பெட் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.