சிறுவனை விசாரணை என தனிப்படை போலீசார் தாக்கியதாக புகார்-அடுத்த பரபரப்பு
சிறுவனை விசாரணை என தனிப்படை போலீசார் தாக்கியதாக புகார் - அடுத்த பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தந்தை இல்லாததால் மகனிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், சிறுவனை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. காயம் அடைந்த சிறுவன், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த நெல்லை சந்திப்பு போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நாகர்கோவில் பா.ஜ.க எம்.எல்.ஏ காந்தி, சிறுவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.