திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் தென்பட்ட பாசி படிந்த பாறையில் அமர்ந்து தியானம் செய்த சாமியாரை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். திருச்செந்தூரில் நாள்தோறும் கடல்நீர் உள்வாங்குவதும், சீற்றமாக காணப்படுவதும் என அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எனினும், கடல் உள்வாங்கியதால் தென்படும் பாசி படிந்த பாறைகள் மீது ஏறி, பக்தர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். இதனிடையே கடலில் இறங்கிய திருநீறு பூசிய சாமியார் ஒருவர், பாறை மீது அமர்ந்து தியானம் செய்தார். அவரது இந்த செயல் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.