திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகை பகுதியில், பெண்ணின் கைப்பயையை பிடுங்கிச் சென்ற குரங்கின் சேட்டையால் சலசலப்பு ஏற்பட்டது. குணா குகையானது வனப்பகுதியில் அமைந்துள்ள நிலையில், குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கள் உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.