கோவையில் கல்லூரி மாணவர்கள் செய்த ஷாக்கிங் சம்பவம்... ரூமுக்கு நேரில் சென்ற பார்த்து மிரண்ட போலீஸ்

Update: 2025-02-24 10:17 GMT

கோவையில் கல்லூரி மாணவர்கள் செய்த ஷாக்கிங் சம்பவம்... ரூமுக்கு நேரில் சென்ற பார்த்து மிரண்ட போலீஸ்

கோவையில் கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்த கல்லூரி மாணவர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். குனியமுத்தூர், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் சோதனை செய்தனர். இதில், ஒரு அறையில் 24 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார், கல்லூரி மாணவர்கள் ஐந்து பேரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்