Kovai | வைஷ்ணவி கொடுத்த புகார்.. இன்ஸ்டா பிரபலம் அதிரடி கைது - அதிர்ச்சியில் தவெக ரசிகர்கள்
கோவையில் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட கார்த்திக் என்ற பிரபல இன்ஸ்டா இன்புளுயன்சரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கோவையைச் சேர்ந்த திமுக பிரபலம் வைஷ்ணவி, கரூர் சம்பவம் குறித்து தவெகவை விமர்சிக்கும் வகையில் ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு கடுமையான விமர்சனங்கள் வெளியான நிலையில், இன்ஸ்டா பிரபலமான கார்த்திக் என்பவர், வைஷ்ணவியின் புகைப்படத்துடன் கூடிய சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். இது குறித்து வைஷ்ணவி அளித்த புகாரின் பேரில்,தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உட்பட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார், அவரை கைது செய்தனர்.