முதல்வர் ஸ்டாலினிடம் திருமண அழைப்பிதழை வழங்கிய வெங்கையா நாயுடு குடும்பத்தினர்
முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவின் குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர். வெங்கையா நாயுடுவின் மகள் வழி பேரனின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, வெங்கையா நாயுடுவின் மகள் தீபா வெங்கட், மருமகன் வெங்கட் மற்றும் பேரன் விஷ்ணு உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.