டி.என்.பி.எல் போட்டியில் கோவை கிங்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கோவை அணி, 19.4 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், 15.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில்
அபராஜித் 48 ரன்களும், ஆஷிக் 35 ரன்களும் எடுத்தனர்.
இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்த அபிஷேக் தன்வார் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், விளையாடிய மூன்று போட்டிகளையும் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், சேலம் அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன. மேலும், கோவை கிங்ஸ் அணிக்கு இது தொடர்ச்சியான மூன்றாவது தோல்வியாகும். எனவே இந்த அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.