சென்னையின் முதல் ஏசி புறநகர் ரயில்... பயணிகளுக்கு வந்த குட் நியூஸ்
சென்னையின் முதல் ஏ.சி. புறநகர் ரயில் சேவையை மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1,116 பேர் அமர்ந்தும், 3,798 பேர் நின்று செல்லும் வகையில் ஏ.சி. வசதியுடன் கூடிய மின்சார ரயில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்த ஏ.சி. புறநகர் ரயில் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி வைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.