சென்னையில் 4 நாட்களுக்கு பிறகு வெயில்
சென்னையில் 4 நாட்களுக்கு பிறகு வெயில் எட்டிப் பார்க்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மணலி புதுநகரில் 20 சென்டிமீட்டர், எண்ணூரில் 19, விம்கோ நகரில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேவேளையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெயிலுக்கு பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.