Chennai Traffic | சென்னையிலிருந்து படையெடுத்த மக்கள் - 2 கி.மீட்டருக்கு ஸ்டன்னாகி நின்ற காட்சி
தொடர் விடுமுறை - சொந்த ஊர் செல்லும் மக்களால் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறையை ஒட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், சென்னை, திருச்சி ஜிஎஸ்டி சாலையில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி, ஏராளமானோர் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்கின்றனர். இதனால் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.