Chennai |TN Police | ஆண் நண்பருக்கு ஏற்பட்ட கதி..! கம்பி எண்ணும் பாய் பெஸ்ட்டீஸ்- எல்லாத்துக்கும் காரணமானஅந்த தோழி..?

Update: 2025-11-21 13:29 GMT
  • சென்னையை அடுத்த பெருங்களத்தூர்ல, முன்னாள் ஆண் நண்பரான கல்லூரி மாணவரை, மாணவி ஒருத்தங்க ஆட்கள ஏவி தாக்கி இருக்காங்க...
  • சேலம் மாவட்டத்தைச் சார்ந்த ஹரிஹரன் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வரும் நிலையில், கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் ஒரே வீட்டில் தங்கியுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அந்த மாணவி அவரது வீட்டில் இருந்து வெளியேறி, தற்போது தோழிகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஹரிஹரன் அறையில் தனது பொருட்கள் இருப்பதாகவும், அதனை மீட்டு தர வேண்டுமெனவும் அந்த மாணவி, தமது கல்லூரியின் முன்னாள் மாணவரான சந்தோஷ் என்பரை அணுகியுள்ளார். ஹரிஹரன் அறைக்கு தமது நண்பர்களுடன் சென்ற சந்தோஷ், அவரை சரமாரியாக தாக்கி, அவரது தங்கச்செயினை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், சந்தோஷின் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்