சிறுமியை பாலோ செய்து அசிங்கம் செய்த நபர்.. கைதான பின் வந்த வாந்தி.. போலீஸ்க்கே காத்திருந்த அதிர்ச்சி
சென்னை அம்பத்தூர் அருகே, கைவிலங்கோடு தப்பியோடிய கைதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 15 வயது சிறுமியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த ஜெ.ஜெ நகர் பகுதியை சேர்ந்த பிரேம்நாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்துச் சென்ற போது வாந்தி வருவதாக கூறி கை விலங்கோடு தப்பியோடியுள்ளார். தப்பியோடிய குற்றவாளியை ஜெ.ஜெ.நகர் போலீசார் தேடி வருகின்றனர்.