Chennai Tasmac | ``மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10’’ - நிரூபிக்கப்பட்டதால் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு
மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல்-ரூ.5000 இழப்பீடு வழங்க உத்தரவு மதுபானத்திற்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததற்காக, 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாதவரம் டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செம்பியம் பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த நிலையில், புகாரை விசாரித்த ஆணையம், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகையை வசூலித்தது முறையற்ற வணிகம் எனக்கூறி, புகார்தாரருக்கு 5 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக இரு மாதங்களில் வழங்க வேண்டும் என மாதவரம் ரவுண்டானா டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு உத்தரவிட்டது. இல்லாவிட்டால் ஆண்டிற்கு 9 சதவீத வட்டியுடன் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.