சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு..வெளியான முக்கிய அறிவிப்பு | Chennai

Update: 2025-01-17 09:11 GMT

பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

19ஆம் தேதி மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, கும்பக்கோணம், சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இந்த ரயில் செல்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்