Chennai | Road | சென்னையில் 3,400 சாலைகளுக்கு புதிய பெயர் - வெளியான அதிரடி அறிவிப்பு

Update: 2025-10-11 08:54 GMT

தமிழகம் முழுவதும் சாதி பெயர் தாங்கிய சாலைகளுக்கு தலைவர்கள் அல்லது மலர்களின் பெயர் சூட்டப்படும் என மாநில அரசு அண்மையில் அறிவித்தது.

அந்த வகையில், சென்னையில் சாதி பெயருடன் கூடிய 3,400 சாலைகளுக்கு புதிய பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, டெண்டர் விடப்பட்டு அடுத்த மாதம் 19-ஆம் தேதிக்குள் தெருக்களின் பெயர் மாற்றப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 35,000 சாலை மற்றும் தெருக்களில்,

சாதி பெயர் கொண்ட 3,400 தெருக்களின் பெயரை மாநகராட்சி அடையாளம் கண்டு மறுபெயரிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

சாலைப் பதிவுகளின் அடிப்படையில் வருவாய்த் துறை இந்த இறுதிப் பட்டியலைத் தயாரிக்கும் என்றும், வரும் திங்கள்கிழமைக்குள் பட்டியல் தயாராகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சாலை பெயர் பலகைகளை எதிரொலிப்பு விளக்குகளுடன் அமைப்பதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்