Chennai Road Issue | சென்னையின் மிக முக்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் - காரணம் இதுதா
Chennai Road Issue | சென்னையின் மிக முக்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் - காரணம் இதுதான்
சென்னை செம்மஞ்சேரியை OMR சாலையுடன் இணைக்கும் 'நூக்கம்பாளையம்' சாலையில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே, இந்த சாலையின் ஒருபக்கத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், குண்டும் குழியுமான 3 கிலோ மீட்டர் தூர சாலையில், எதிர்திசையில் நுழையும் வாகனங்களையும் கடந்து செல்ல அரைமணி நேரத்திற்கும் மேல் போராட வேண்டிய சூழல் உள்ளதாக தெரியவருகிறது. மழைக்காலம் தொடங்கிய நிலையில், மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடித்து, சாலையில் வாகனங்கள் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.