Chennai | Road Accident | சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி விபத்து
வள்ளுவர்கோட்டம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் சுமார் 80 வயது மூதட்டி நடந்து சென்றுள்ளார். அப்போதோ பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியதில், முன்னால் இருந்த தண்ணீர் லாரியில் வலது கை சிக்கி நசுங்கிய நிலையில், மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சென்ற போலீசார் காரை பறிமுதல் செய்து, விபத்தை ஏற்படுத்திய இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.