சென்னையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பலவேறு வழக்குகளில் கைதான1002 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 நபர்களும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாத காலமாக சிறையில் உள்ளனர். இந்த நிலையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் குண்டர் தடுப்பு சட்டப்பிரிவு கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.