சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், ஒரே நாளில் 4-க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. கரையோர பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து ஆமைகள் இறந்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரைக்கு வந்து குழிதோண்டி முட்டைகளை இட்டுவிட்டு கடலுக்குத் திரும்பும் ஆமைகள் படகுகளில் மோதியும், வலைகளில் சிக்கியும் இறப்பதாக கூறப்படுகிறது. மெரினா முதல் கோவளம் கடற்கரை வரை, தினந்தோறும் ஏராளமான கடல் ஆமைகள் செத்து கரை ஒதுங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த் தொற்று ஏற்படும் என்பதால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.