பச்சையப்பன் மாணவர்கள் எடுத்த திடீர் முடிவு - பரபரப்பான கல்லூரி

Update: 2025-01-23 14:17 GMT

சென்னை பச்சையப்பன் கல்லூரியை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பச்சையப்பன் அறக்கட்டளையின் செயல்பாடுகளை கண்டித்தும், கல்லூரியின் முதல்வரை கண்டித்தும், ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எதிராக செயல்படுவதாகவும், கல்லூரி சார்ந்த செயல்பாடுகளில் தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்