Chennai Murder | கணவனை கொன்று பாவ நாடகம் போட்ட மனைவி - சென்னையை அதிர வைத்த காரணம்
கள்ளக்காதல் விவகாரம் - கணவனை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய மனைவி கைது
சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொடுங்கையூரைச் சேர்ந்த சரண்யாவும், திவாகர் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதுகுறித்து சரண்யாவின் கணவர் மணிகண்டன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண்யா தனது கணவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததுடன், தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில், உண்மை தெரியவந்த நிலையில், சரண்யாவை போலீசார் கைது செய்தனர்.