சென்னையில் கால்வாய்களில் கட்டப்பட்டுள்ள குளுக்கோஸ் பாட்டில்கள் - ஏன் தெரியுமா?
சென்னையில் உள்ள கால்வாய்களில், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் குளுக்கோஸ் பாட்டில்கள் மூலம் கொசு ஒழிப்பு பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களில் இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குளுக்கோஸ் பாட்டில்களில் கொசு ஒழிப்பு மருந்தான எம்.எல். திரவத்தை நிரப்பி, அதை கால்வாய் ஓரங்கள் மற்றும் கொசு உற்பத்தியாகும் இடங்களில் இடைவெளிவிட்டு கட்டி விடுகின்றனர். இதன்மூலம், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் மேல் பகுதியில் கொசு ஒழிப்பு திரவம் கலந்து, ஆரம்ப நிலையிலேயே கொசு புழுக்கள் அழிக்கப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.