பிரமிக்க வைக்கும் அளவிற்கு மாறப்போகும் கத்திப்பாரா - வெளியான குட் நியூஸ்
'பேலன்ஸ் கான்டிலீவர்' balanced cantilever என்ற பொறியியல் முறையை பின்பற்றி, கத்திப்பாரா பாலத்தின் மேல் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் 5-வது வழித்தடத்தில், கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிரமிக்க வைக்கும் உயரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே பாலத்திற்கு மேற்புறத்தில் இரண்டு மெட்ரோ வழித் தடங்கள் செல்லும் நிலையில், 30 மீட்டர் உயரத்தில் மற்றொரு வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் அதற்கான பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.