ஈ.சி.ஆர் சாலையில் நடைபெற்ற மகளிர் தின மாரத்தான் போட்டியை நடிகை சினேகா மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் ஆகியோர் துவங்கி வைத்தனர்.பெண்கள் பாதுகாப்பு தொலைபேசி எண் மற்றும் காவல் உதவி ஆப் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி சுமார் 5 கிலோ மீட்டர் வரை நடைபெற்றது.இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஐந்தாயிரம் பேர் ஓரே டிஷர்ட் அணிந்து பங்கேற்றனர்.