Chennai Dog | 10 பேரை குதறிய நாயை டெஸ்ட் செய்தபோது தெரியவந்த ஷாக் நியூஸ்
சென்னை தண்டையார்பேட்டையில், இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேரை கடித்த தெரு நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த திமுக பிரமுகர் மனோகரன் என்பவர் தெருவில் சுற்றித்திரிந்த நாய்க்கு
உணவளித்து வளர்த்து வந்தார். அந்த நாய் வீட்டிற்கு பிளம்பிங் வேலை செய்வதற்காக வந்தவர், ஐந்து வயது பள்ளி குழந்தை என மொத்தம் 10 பேரை கடித்துள்ளது. இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் நாயை பிடித்து சோதனை செய்ததில், ரேபிஸ் இருப்பது தெரியவந்தது.