Chennai Delivery Boy | பாராட்டுகளை குவிக்கும் சென்னையை சேர்ந்த டெலிவர் பாய்..

Update: 2025-10-11 03:34 GMT

Chennai Delivery Boy | பாராட்டுகளை குவிக்கும் சென்னையை சேர்ந்த டெலிவர் பாய்..

சாலையில் கிடந்த ரூ.48,500 பணம் - போலீசில் ஒப்படைத்த டெலிவரி பாய்

சென்னை பெசன்ட் நகர் சாலையில் கேட்பாரற்று கிடந்த 48 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்து, காவல்துறையிடம் ஒப்படைத்த, டெலிவரி நிறுவன ஊழியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. எல்லையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த ஜெயபிரதீப், ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் டைகர் வரதாச்சாரியார் சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் கிடந்த பணக் கட்டை எடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தற்போது, பணத்தின் உரிமையாளரை கண்டறிய போலீசார், அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்