சென்னை அருகே குன்றத்தூர் பஜாரில் டார்லிங் ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டார்லிங் ஷோரூமை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதன் பிறகு ஷோரூமில் உள்ள வீட்டு உபயோக பொருட்களை பார்வையிட்டார். பின்னர் பொருட்கள் வாங்கிய நபருக்கு அந்த பொருளைக் கொடுத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் டார்லிங் ஷோரூம் உரிமையாளர் வெங்கடசுப்பு, நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். குன்றத்தூரில் தொடங்கப்பட்ட டார்லிங் ஷோரூமில் கேஸ் அடுப்பு நிறுவனம் புதிதாக தொடங்கிய கேஸ் அடுப்பை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.