Chennai Crime | வீட்டிற்குள் சடலமாக கிடந்த மனைவி - போலீசுக்கு போன் போட்டு கணவன் சொன்ன தகவல்

Update: 2025-10-06 07:29 GMT

சென்னை திருவொற்றியூரில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மனைவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநர் கோபால், சம்பவத்தன்று இரவு மது போதையில் அவரது மனைவி ஜோதிகாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். கணவன் மனைவிக்கிடையே தகராறு முற்றி கைகலப்பான நிலையில், இரவோடு இரவாக தன் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக, காவல் நிலையத்தில் கோபால் புகார் அளித்துள்ளார். உண்மையில் நடந்தது தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்