நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தேதி அறிவிப்பு

Update: 2025-11-10 09:11 GMT

சென்னையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 767 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப்பிங் பொருத்தி உரிமம் வழங்கப்பட்டது. செல்லப்பிராணி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதை எளிதாக்க மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் போர்டல் அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப்பிங் பொருத்தும் பணிகள் நவம்பர் 16 மற்றும் 23 தேதிகளில் மீண்டும் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்