சென்னை மாநகராட்சி மாமன்ற மாதாந்திர கூட்டத்தில், கவுன்சிலர்கள் முறையாக பங்கேற்பதில்லை என்று குற்றச்சாட்டு நிலவுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில், 85 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளில் உள்ள குறைபாடுகளை மாநகராட்சி மேயரிடம் தெரிவித்து, அதற்கான திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் பெற வேண்டும்.ஆனால் சில கவுன்சிலர்கள் கூட்டத்தினை அலட்சியப்படுத்தி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.அவர்கள் தொடர்ந்து மூன்று முறை மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கா விட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.