மும்பை டூ சென்னை... கிடைத்த ரகசிய தகவல்... சிக்கிய 6 பேர் ஏர்போர்ட்டில் பரபரப்பு

Update: 2025-02-26 16:39 GMT

துபாயிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூபாய்.2.8 கோடி மதிப்புள்ள, 3.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மும்பையில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்த அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமாக வந்த 6 பேரிடம் தீவிர சோதனை நடத்தினர். அதில், அவர்களின் உள்ளாடைகளில் 3.5 கிலோ தங்கப் பசையை கடத்திவந்தது தெரியவந்தது. இதனையடுத்து 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூபாய் 2.8 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்