``அவன் வந்தாலே கஞ்சா வியாபாரிலாம் நடுங்கி ஓடுவான்.. கை, கால் தனியா எடுத்துட்டானுங்களே'' - தாய் கதறல்
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில், நள்ளிரவில் குத்துச்சண்டை வீரரை மர்மக்கும்பல் ஓட ஓட வெட்டிக்கொன்ற சம்பவத்தில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கஜபதி தெருவை சேர்ந்த ராஜேஷ்-ராதா தம்பதியரின் மகன் தனுஷ், தமிழ்நாடு சார்பில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், முன்விரோதம் காரணமாக தனுஷை அவரது வீட்டின் அருகே மர்மக்கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது. இதைத்தடுக்க சென்ற அவரது நண்பர் அருணையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பியது. சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக இருந்த மோகன், செந்தில் உட்பட 9 நபர்களை கைது செய்துள்ளனர்.