Chennai | ஆட்டோ ஓட்டுநரை மர்ம கும்பல் கடத்தி கொ*ல - சென்னையில் பரபரப்பு
ஆட்டோ ஓட்டுநரை மர்ம கும்பல் கடத்தி கொ*ல - சென்னையில் பரபரப்பு
சென்னையில் ஆட்டோ ஓட்டுநரை மர்ம கும்பல் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் சானிடோரியம் பகுதியைச் சேர்ந்த வினோத் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். சம்பவத்தன்று நாகல்கேணி அருகே ஆட்டோவில் இருந்த வினோத்தை ஆட்டோவுடன் கடத்திய மர்ம கும்பல் முடிச்சூர் அருகே காலி இடத்திற்கு கொண்டு சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
இது தொடர்பாக கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.