Chennai Airport | மயங்கி விழுந்த அக்கா.. தங்கை செய்த செயல் - கண்கலங்க வைக்கும் பாசப்போராட்டம்

Update: 2025-10-09 05:13 GMT

திருச்சியை சேர்ந்த கல்பனா, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அந்தமானில் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கு வந்த கல்பனாவை, அவரது அக்கா மலர் உடனிருந்து கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து தங்கை கல்பனா அந்தமான் புறப்பட்ட போது, வழியனுப்ப வந்த மலர், பிரிய மனமில்லாமல் அழுதபடி திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை பணியாளர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனிடையே சகோதரியின் நிலைமையை பார்த்து மனமுடைந்த கல்பனா, தன்னால் பயணத்தை தொடர முடியாது என கண்ணீருடன் தனது உறவினர்களிடம் தெரிவித்தார்

ஆனால் உறவினர்கள் விமானத்திற்கு செல்ல நேரமாகி விட்டது எனக்கூறி அவரை அந்தமானுக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது, மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார், மனமில்லாமல் அழைத்து செல்லாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளனர். இதையடுத்து கல்பனாவை அழைத்து செல்லாமல், அக்காவுடன் விட்டுச் சென்றனர். இந்த அக்கா, தங்கையின் பாசப் போராட்டத்தால் அந்தமான் விமானம் சுமார் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்